Saturday, January 29, 2011

Puliyodharai(kovil) புளியோதரை


தேவையானவை 
 புளி - எலுமிச்சை அளவு
 வெந்த சாதம் -4 கப்

தாளிக்க
 நல்ல எண்ணெய்- 4 tsp
 காய்ந்த மிளகா -7,8
 கடுகு -1 tsp
 கடலை பருப்பு -1tsp
 உளுத்தம் பருப்பு -1tsp
பெருங்காயம்
 கறிவேப்பில்லை -1 கொத்து.

 வறுத்து ,பொடிக்க
காய்ந்த மிளகாய்  -5 ,6
கடலை பருப்பு - 2 tsp
கொத்தமல்லி விதை -2 tsp
எள்ளு -1tsp
வெந்தயம்-1 /4 tsp
அனைத்தையும் வறுத்து ,பொடித்து கொள்ளவும் .

செய்முறை
1  .புளியை கரைத்து கொள்ளவும் .
2 .வானலியை  வைத்து எண்ணெய் சூடான பிறகு அனைத்தையும்   தாளித்து,புளி கரைசலை அத்துடன் சேர்க்கவும் .
3 .புளி கரைசலை கொதிக்கும்பொழுது அரைத்த  பொடியை சேர்க்கவும்.
4 .எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க வைத்து வெந்த சதத்துடன் கிளறி பரிமாறவும்..


வத்தல்,வறுவல்,சட்னி வைத்து உண்ணவும்.

No comments:

Post a Comment