Friday, August 19, 2011

புதினா சட்னி

புதினா சட்னி

தேவை

புதினா - 1  கப் 
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
உளுத்தம்பருப்பு - 2  tspn
கடலை பருப்பு - 2 tspns
தேங்காய் துருவல்  - 4 tspn 
எண்ணெய்
உப்பு

செய்முறை
  1. ஒரு வாணலில் ஒரு tspn எண்ணெய் விட்டு  கடலை பருப்பு ,உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து அதில் புதினா,இஞ்சி  ,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. ஆறிய பிறகு தேங்காய் துருவல் ,உப்பு  சேர்த்து அரைக்கவும்.

                                           

                                      


இட்லி , தோசை  வகைகளுக்கு நன்றாக இருக்கும் .

Wednesday, August 17, 2011

Easy சாம்பார் சாதம்


சாம்பார் சாதம்

தேவையானவை:

அரிசி -1 கப்
துவரம் பருப்பு  - 1 /2 கப்
சக்தி மசாலா சாம்பார் பொடி-  2  tspn
எண்ணெய்
உப்பு

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2

பச்சை பட்டாணி
கேரட்
பீன்ஸ்
உருளை கிழங்கு
கத்திரிக்காய்
இவை அனைத்தும் சேர்த்து  1  கப்

தாளிக்க 
 எண்ணெய் - 2  tspn
நெய் - 2  tspn 
கடுகு  - 1  tspn
உளுத்தம் பருப்பு  - 1  tspn
சீரகம் - 1  tspn
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 10 ,15

செய்முறை:
  1. cooker-ல் 2 tspn எண்ணெய் ஊற்றி நீளமாக அறிந்த பெ.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி சேர்க்கவும்.
  2. எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
  3. உப்பு ,சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  4. வதங்கிய  பிறகு  3 1/2  கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சூடானவுடன் கழுவிய அரிசி, துவரம்பருப்பு சேர்க்கவும்.
  5. உப்பு , காரம் சரி பார்த்து  கொஞ்சம்  தூக்கலாக  இருக்கும்படி  பார்த்து கொள்ளவும்.
  6. பிறகு cooker யை மூடி 6  விசில் விட்டு இறக்கவும். 

      கடைசியாக  வாணலி வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு,உ.பருப்பு  ,சீரகம்,சி.வெங்காயம் ,கறிவேப்பில்லை தாளித்து சாம்பார் சாதத்தில் கொட்டி,கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.