Wednesday, August 17, 2011

Easy சாம்பார் சாதம்


சாம்பார் சாதம்

தேவையானவை:

அரிசி -1 கப்
துவரம் பருப்பு  - 1 /2 கப்
சக்தி மசாலா சாம்பார் பொடி-  2  tspn
எண்ணெய்
உப்பு

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2

பச்சை பட்டாணி
கேரட்
பீன்ஸ்
உருளை கிழங்கு
கத்திரிக்காய்
இவை அனைத்தும் சேர்த்து  1  கப்

தாளிக்க 
 எண்ணெய் - 2  tspn
நெய் - 2  tspn 
கடுகு  - 1  tspn
உளுத்தம் பருப்பு  - 1  tspn
சீரகம் - 1  tspn
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 10 ,15

செய்முறை:
  1. cooker-ல் 2 tspn எண்ணெய் ஊற்றி நீளமாக அறிந்த பெ.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு தக்காளி சேர்க்கவும்.
  2. எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
  3. உப்பு ,சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  4. வதங்கிய  பிறகு  3 1/2  கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சூடானவுடன் கழுவிய அரிசி, துவரம்பருப்பு சேர்க்கவும்.
  5. உப்பு , காரம் சரி பார்த்து  கொஞ்சம்  தூக்கலாக  இருக்கும்படி  பார்த்து கொள்ளவும்.
  6. பிறகு cooker யை மூடி 6  விசில் விட்டு இறக்கவும். 

      கடைசியாக  வாணலி வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு,உ.பருப்பு  ,சீரகம்,சி.வெங்காயம் ,கறிவேப்பில்லை தாளித்து சாம்பார் சாதத்தில் கொட்டி,கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


3 comments:

  1. For bachelors, its a very instant but tasty sambhar satham stuffed with all vegies

    ReplyDelete
  2. yes,healthy also.
    thanks 4 ur comments...

    ReplyDelete