Wednesday, September 7, 2011

கீரை சாதம்

தேவையானவை

முளைக்கீரை - 1 கட்டு
அரிசி - 1 கப்
துவரம்பருப்பு -1 /2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 tspn
பூண்டு - 2  பல்
கடுகு - 1 tspn
உளுத்தம்பருப்பு - 1 tspn
எண்ணெய், நெய் - 2  tspn

செய்முறை
  1. கீரையை நன்கு அலசி பொடியாக நறுக்கவும்.
  2. அரிசி,பருப்பு இரண்டையும்  ஊற வைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய்,நெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு பொரிந்ததும் கீரை, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. அத்துடன் ஊற வாய்த்த அரிசி,பருப்பு,சாம்பார் பொடி, மஞ்சள் பொடி,உப்பு சேர்க்கவும்.
  5. 1 கப் அரிசிக்கு 1  1 /2 தண்ணீர் கப் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment