Friday, November 4, 2011

நாட்டு கோழிச்சாரு/chicken kulambu


தேவையானவை

நாட்டு கோழி  - 500 கிராம்
சின்ன வெங்காயம்  -150கிராம்
மல்லி தூள்  - 2  தேக்கரண்டி 
நல்ல எண்ணெய் - ஒரு  கப்
உப்பு

அரைக்க

நல்ல எண்ணெய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10 
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்  - ஒரு  கப்

செய்முறை
  1. கடாயில்  2 தேக்கரண்டி நல்ல எண்ணெய் விட்டு மிளகு,சீரகம் கா.மிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் .
  2. அதே கடாயில் சின்ன வெங்காயத்தையும் வதக்கி தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் ஒரு கப் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் ,கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும் .
  4. பிறகு வெட்டிய நாட்டு கோழி சேர்த்து நன்றாக  வதக்கவும்.
  5. கோழி நன்றாக வதங்கிய பிறகு அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.
  6. மல்லி தூள்,உப்பு  போட்டு  தண்ணீர்  சேர்த்து  கொதிக்க வைக்கவும் .
  7. கோழி வெந்து கெட்டியானதும் இறக்கவும் .
  8. இட்லிவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்  

சன் டிவியில்  ஆஹா என்ன ருசி பார்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது  

No comments:

Post a Comment