Friday, July 27, 2012

kambu adai / கம்பு அடை

கம்பு அடை

தேவையானவை :

 கம்பு - 3 கப்
 துவரம் பருப்பு - 1 கப்
 சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
 தயிர் - 1/2 கப்
 உப்பு

தாளிக்க

கடுகு -1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
காய்ந்த   மிளகாய் -4,5
கறிவேப்பில்லை -1 கொத்து
எண்ணெய் -1 ஸ்பூன்

செய்முறை :

1.கம்பை சுத்தம் செய்து ,கழுவி வெயிலில் காய வைத்து ,ரவை போல் உடைத்து கொள்ளவும்.
2.துவரம்  பருப்பை ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக்கொண்டு,பொடி செய்த கம்புடன்  உப்பு,தயிர் சேர்த்து கிளறி வைக்கவும்.
3.வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, பொடியாக அறிந்த வெங்காயம்  போட்டு தாளிக்கவும்.
4.எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து 3 மணி நேரம் கழித்து சிறு சிறு அடைகளாக ஊற்றி எடுக்கவும்.

ஒரு வார இதழ்  பார்த்து செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது .